டெல்லிப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘டி.எச்.எம். 11’ என்ற ரகத்தோடு மூன்று மரபணு மாற்று கடுகு ரகங்களை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. நாடெங்கிலும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகம், இயல்பிலேயே பல சிக்கல்கள், பாதகங்களை தனக்குள் கொண்டுள்ள போதிலும் அவை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனுமதித்தால், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் சவாலாக இருக்கும். இதே வகையான கடுகை ஏற்கெனவே 'பேயர்' (Bayer) என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்க அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.